மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொழில் துறையினருக்கு 7 வாக்குறுதிகள் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புது புது வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். அதன்படி தொழில் துறையினருக்கான 7 வாக்குறுதிகளை அவர் கூறியுள்ளார். அதில், புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளுக்கான துறை. தொழில் துறையுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வலுப்படுத்துதல். குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளின் மேம்பாடு. அமைப்புசாரா தொழிலாளர் வலுப்படுத்துதல். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். வளர்ச்சிக்கான தொழில்துறை முதலீடு திட்டம் ஆகிய ஏழு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.