Categories
மாநில செய்திகள்

மநீம- வில் புதிய நிர்வாகிகள் நியமனம்… வெளியான அறிவிப்பு…!!!

மக்கள் நீதி மைய கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மைய கட்சியின் கட்டமைப்பின் துணைத் தலைவராக ஏஜி மவுரியா, களப்பணி துணைத்தலைவராக தங்கவேலு, தலைமை நிலைய மாநில செயலாளராக சரத் பாபு, நிர்வாக குழு உறுப்பினராக ஸ்ரீப்ரியா சேதுபதி, நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளராக நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |