Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மந்திரித்த கயிறால் வந்த விளைவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தூக்கில் தொங்கிய தொழிலாளி….!!

மதுபழக்கத்தை கைவிட முடியாமல் தவித்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி வீதியில் வசித்து வந்த மூர்த்தி என்பவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மூர்த்திக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அதிக வறுமை ஏற்பட்டதால் குடும்பத்தினர் மூர்த்தியிடம் குடிபழக்கத்தை கைவிடும்படி கூறியுள்ளனர்.

இதனை கேட்காமல் மீண்டும் குடித்ததால் அவரது குடும்பத்தினர் மூர்த்தியை கோவிலுக்கு அழைத்துச் சென்று மந்திரித்து கயிறு ஒன்றை கையில் கட்டியுள்ளனர். மேலும் மந்திரித்த கயிறு கட்டி உள்ளதால் மூர்த்தியிடம் குடிக்க கூடாது என்றும், குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தனர். இதனையடுத்து மூர்த்தி ஒரு நாள் மட்டும் குடிக்காமல் வீட்டில் இருந்துள்ளார்.

ஆனால் குடிபழக்கத்தை கைவிட முடியாததால் மனமுடைந்த மூர்த்தி தொண்டி கடற்கரை அருகில் இருந்த ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தொண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |