பெரம்பலூரில் மறைந்த நாம் கட்சி நிர்வாகிகளின் நினைவேந்தல் நிகழ்வில் சீமான் கலந்துகொண்டார். அப்போது பேசிய சீமான், “நான் படும் பாடு இருக்கிறதே! நாம் ஒன்று பேசினால், அவர்கள் வேறு ஒன்று எடுத்துப் பேசுகிறார்கள். நான் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏன் மதம் மாற சொல்கிறேன் என்று கூறுகிறார்கள். எவ்வாறு தான் இவர்களுக்கு மனசாட்சியே இல்லாமல் இப்படி பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை.
இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் தாய்மதம் திரும்ப வேண்டுமென்று நான் அழைத்தேனா? நான் மதத்தைப் பரப்புவதற்கு வந்த கால்டுவெல் மற்றும் ஜி.யு. போப்பா? நான் மதத்தை பரப்ப வந்தவன் அல்ல. நான் இனத்தை பரப்ப வந்த ராஜா. மேலும் நான் எனது மொழி, இனம், என் வரலாறு, என் கோட்பாடு இவைகளில் மிகவும் உறுதியாக உள்ளேன். தமிழர்கள் இந்துக்கள் என்ற எச்.ராஜா கூறினார். அவரை யாரும் இங்கு எதிர்க்க வில்லை.
இந்துக்கள் எல்லாம் தமிழர்கள் என்றால் பீகாரில் உள்ள குஜராத்தில் உள்ள எல்லாரும் தமிழன் ஆகிவிடுவாரா? இதை ஒருத்தரும் எதிர்த்துப் பேசவில்லை. என் எச்சியில் இருந்துதான் பலபேர் இன்று கட்சியை நடத்துகின்றார்கள். மிக பெரிய பெரிய செலவு செய்து பனைசந்தையை நடத்தி அதில் பல்வேறு செய்திகளை கூறுகிறோம். அதையெல்லாம் அவர்கள் விட்டுவிட்டு இதனைப் பிடித்து எல்லோரும் பேசுகிறார்கள்”என்று கூறினார்.