Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மனசு சரியில்ல அம்மா” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் கண்டித்ததால் மாணவன் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில்  உள்ள சோமரசம்பேட்டையில் இருக்கும் அய்யனார் கோவில் தெருவில் ராதாகிருஷ்ணன் -சந்திரா  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகனான ஹரிஹரன்  இணியானுரில் இருக்கும் தனது தாத்தா மருதமுத்து வீட்டில் தங்கி அப்பகுதியில் இருக்கும்  பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்  தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட  ஹரிஹரன் தனக்கு  மனது சரியில்லை எனவும், இன்று ஒருநாள் நான் பள்ளிக்கு செல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு கோபமடைந்த சந்திரா  ஹரிஹரனை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் தாத்தா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருக்கின்றனர்.

Categories

Tech |