Categories
தேசிய செய்திகள்

“மனசு பதறுது” ஜிம்மில் மாரடைப்பால் உயிரிழந்த நபரின்…. கடைசி நிமிட காட்சிகள்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பனஷங்கரி என் என்ற இடத்தில் 33 வயதான இளைஞர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு அங்கேயே ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. அந்த இளைஞர் உடற்பயிற்சியை முடித்துவிட்டு அசதியாக அங்குள்ள படிக்கட்டில் வந்து அமர்கிறார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உடல் வியர்க்க ஆரம்பித்தது. இந்த விஷயத்தை அவர் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் தண்ணீரை எடுத்து குடித்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து சில நொடியிலேயே அங்கேயே நிலை தடுமாறி சுருண்டு விழுந்துள்ளார். இறக்கும் தருவாயில் அவருடைய கடைசி தருணங்கள்  கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்பையடுத்து இளைஞர்கள் அதிகப்படியான உடற்பயிற்சி கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் முழுமையான இதய பரிசோதனை மற்றும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு அனைவரும் ஜிம்மிற்கு போக தயாராக வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/DadjokO_xlQ

.

Categories

Tech |