Categories
சினிமா தமிழ் சினிமா

மனதளவில் பாதிக்கப்பட்டு…. மன நல மருத்துவரை அணுகிய ஆண்ட்ரியா…. என்ன காரணம் தெரியுமா….???

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் ரிலீசான புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் சில காட்சிகளை நடித்தது தன்னை மனதளவில் பாதித்ததாக ஆண்ட்ரியா கூறியுள்ளார். இதனால் அவர் மனநல மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார். தினசரி வாழ்க்கையில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை நினைத்துப்பார்ப்பதே தன்னை உலுக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |