தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நடிகை தீபா இணையத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவர் விஷாலின் துப்பறிவாளன், வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் இன்ஸ்டாவில் ஆக்டி செயல்பட்டார். இவர் சென்ற 7 நாட்களுக்கு முன்பாக இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ குறித்து தான் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, யாரிடமாவது மனசு விட்டு பேசணும் போல தோணுது, ஆனால் கேக்குறதுக்கு தான் யாருமே இல்லை என்கிற படம் வசனத்தை பேசி இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், அவர் தனது வாழ்க்கையில் நடந்ததை சொல்லத்தான் அப்படி ஒரு வசனத்தை பேசியது புரியாமல் போய்விட்டது. உங்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வதாகவும் யாரிடமாவது மனசுவிட்டு பேசியிருக்கலாம். இப்படி அவசரப்பட்டு இருக்க தேவையில்லை என கூறி வருகின்றார்கள்.
https://www.instagram.com/powlenjessica_offl/?utm_source=ig_embed&ig_rid=33e72d2d-aa19-4668-bd31-9b1683cf11e6