Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனதை உருக வைக்கும் Video…! பேருந்தை விடாமல் துரத்தும் குதிரை…. எதற்காக தெரியுமா…???

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதிகளில் பத்திற்கு மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு சென்றதால் அதனை பிரிந்த குட்டி குதிரை தன்னுடைய தாய் குதிரையை தேடி வந்துள்ளது. அப்போது பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை உருவ ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்த அந்த குதிரை குட்டி பேருந்தை செல்ல விடாமல் சுற்றி சுற்றி வந்தது.

பின்னர் சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பியதும் தாய் குதிரை இருப்பது போன்ற படத்தை பார்த்த அந்த குதிரை பேருந்தை விடாமல் துரத்திச் சென்று கனைத்துள்ளது. இதை பார்த்த அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் குட்டி குதிரையின் பாசத்தை பார்த்து மனம் உருகியுள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |