Categories
தேசிய செய்திகள்

மனதை உலுக்கும்…. சொல்ல அருவருக்கத்தக்க கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்…!!!

நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான கொடூரமான ஒவ்வொரு விஷயங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு தொழில்நுட்பங்களும் விஞ்ஞானமும் வளர்ந்து வரும் நிலையில் பல விஷயங்கள் இன்னும் மாறாமலேயே இருக்கிறது. இந்நிலையில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவருடைய கை கால்களை கட்டி பின்பு அவருடைய பிறப்புறுப்பை அலுமினிய நூலை கொண்டு தைத்துள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அந்தப் பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக பிறப்புறுப்பை அலுமினிய நூலால் தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |