தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக் மூலம் முகம் தெரியாத நண்பர்கள் அதிக அளவு அறிமுகமாகிறார்கள். அதில் சில நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. அதனை அறியாமல் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்பவர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக பெண்கள் இதில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் குருகிராம் பகுதியில் வசித்து வந்த 22 வயது இளம்பெண் ஒருவர் ஹரியானாவை சேர்ந்த சாகர் என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 3ஆம் தேதி ஹோதல் பகுதிக்கு இளம்பெண், சாகரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று சாகர் உட்பட 25 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகு பதர்பூர் அருகே இளம்பெண்ணை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் பெண்கள் பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி எங்கும் செல்ல வேண்டாம் என்பதற்கு இது ஒரு பாடம். அதனைப் போலவே பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எங்கு போய் வருகிறார்கள் என்பதை கவனிப்பது மிகவும் அவசியம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால், அனைவரும் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.