Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாலிவரம் பகுதியில் திம்மப்பா(28) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 27 வயதுடைய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து ஆறு மாதங்கள் கழித்து உடல்நலம் பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளம்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திம்மப்பாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் திம்மப்பாவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |