விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு பிரபாகரன் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் தந்தை திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சாந்தி பிரபாகரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.