மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த சிறுமி ஊனமுற்றோர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உறவினரான சீனு(26) என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சீனுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.