மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வர மறுத்த பெண்ணிடம் அண்ணன் என்று பாசத்துடன் கூறி அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பழனி காவல்துறையினருக்கு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் பலர் மீது தாக்குதல் நடத்துவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதோடு அவரது உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்து பழனியில் அந்த பெண்ணை விட்டு சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலையில் அடிபட்டு சிகிச்சை எடுக்காமல் இருந்த அந்தப் பெண்ணை காவல்துறையினர் சிகிச்சைக்காக அழைத்து உள்ளனர். ஆனால் அந்தப் பெண் அவர்களுடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில் அந்தப் பெண்ணிடம் அண்ணன் கூப்பிடுகிறேன் வா என பாசத்துடன் அழைத்துள்ளார். இதனைக் கேட்ட அந்த பெண் உடனடியாக சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு அவருடன் சென்றார். ஆய்வாளர் பாசத்துடன் செய்த செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.