திருச்சி மாவட்டத்தில் உள்ள வாழ்மால் பாளையம் கீழூர் வடக்கு தெருவில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மேலும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் சரண்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சுகிசிக்காக அனுமதித்தவர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.