Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மனநலம் பாதிப்பு” திட்டிய குடும்பம்…. டவர் மீது ஏறி அமர்ந்து கொண்ட இளைஞர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டில் திட்டியதால் செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது

தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மன நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று வீட்டில் அருணாச்சலத்தை குடும்பத்தினர் திட்டியுள்ளனர். இதனால் கோபம் கொண்ட அவர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மனநலம் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தை பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் அந்த இளைஞரை குடும்பத்தினரிடம் அறிவுரை கூறி ஒப்படைத்தனர்.

Categories

Tech |