Categories
மாநில செய்திகள்

மனநல காப்பகத்தில் மலர்ந்து காதல் ஜோடிக்கு திருமணம்… “அமைச்சர் வழங்கிய கல்யாண பரிசு”…? மகிழ்ச்சியில் மணமக்கள்…!!!!!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பணி நியமன ஆணையை வழங்கி மணமக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார்.

கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில்  சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மகேந்திரனுக்கும், வேலூரைச் சேர்ந்த தீபாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கீழ்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் நேற்று இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. மனநல காப்பகத்திற்கு வெளியே உள்ள கோவிலில் மருத்துவம் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் கல்யாண பரிசாக அமைச்சர் மா சுப்பிரமணியன் பணி நியமன ஆணை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் வாழ்த்தியுள்ளார்.

இதனை அடுத்து மகேந்திரன் தீபா தம்பதியினருக்கு வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்த மனநல காப்பகத்திலேயே 15 ஆயிரம் மாத சம்பளத்தில் வார்டு  மேலாளர் பணிகளை இருவருக்கும் வழங்கி அமைச்சர் மாசுபிரமணியன் அவர்களின் வாழ்க்கைக்கு ஒளியேற்றியுள்ளார். இதனை அடுத்து மனநல காப்பகத்தில் இயக்குனர் மருத்துவர்கள் போன்றோர் அவர்களுக்கு சீர்வரிசை அளித்துள்ளனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் அன்பினால் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த மணமக்கள் சொல்ல வார்த்தை இல்லாமல்  திகைத்து போயிருந்தனர். இதனை அடுத்து மணமகன் மகேந்திரன் பேசும்போது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம் எங்களுடைய திருமணம் இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நடத்தி வைத்திருக்க மாட்டார்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |