பல நாடுகளில் மனநல பிரச்சினை என்பது மிகப்பெரிய நோயாக பார்க்கப்படுகிறது. மனநோயாளிகளை சமூகத்தை விட்டு விலகி வைக்கும் அளவிற்கு மோசமானதாக உள்ளது. மன அழுத்த பிரச்சனைகள் காரணமாக பலர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்கொலை எதற்கும் தீர்வாகி விடாது. தற்கொலை செய்து கொள்வதால் நாம் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க போவது கிடையாது. அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் மனநோய் என்பது மிகவும் அதிக அளவில் காணப்படுகின்றது. அந்த வகையில் பல நடிகர், நடிகைகள் மனநோயிலில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டும் வந்துள்ளதை வெளிப்படையாக பேசியுள்ளனர். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
மனுஷா கொய்ராலா : தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் ஹிந்தியில் தில்சே என்ற படத்தில் பிரபலமாக பேசப்பட்டார். அதை தொடர்ந்து முதல்வன், பாபா, மாப்பிள்ளை போன்ற தமிழ் படங்களிலும் இவர் நடித்தார். இவர் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கு காரணம் தனது முன்னாள் கணவர். மருத்துவ ரீதியாக தனது மனசோர்வை எதிர்த்து போராடினார். புற்றுநோய் வந்த பிறகும் கூட சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். இந்த விஷயங்களை எல்லாம் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யோ யோ ஹனி சிங் : ஹிப் ஹாப் ஆதி போல பாலிவுட் பாப் பாடகராக இருப்பவர் யோ யோ ஹனி சிங். தமிழில் எதிர்நீச்சல் படத்திலும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் பாடல்களை பாடியுள்ளார். இவர் சிறிது காலமாக எந்த பாடல்களையும் வெளியிடாமல் இருக்கிறார். இவருக்கும் பி போலார் டிஸ்ஆர்டர் என்ற மனநோய் இருப்பதாக சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். இது குறித்து தெரிவிக்கும் போது எனக்கு மிக பயமாக இருந்தது. டெல்லி மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிப்பதிலேயே ஒரு வருடம் சென்றுவிட்டது.
மருந்துகள் எதுவும் பயன் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் நான் வாழ்வேனா என்ற அச்சம் எனக்கு வந்தது. எல்லோரிடமும் இருந்த எனது உறவை நான் துண்டித்துக் கொண்டேன். எனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. வீட்டிற்கு வெளியே வருவதை நிறுத்தி விட்டேன். 20 ஆயிரம் நபர்களுக்கு முன்னால் நிகழ்ச்சியில் பாடிய எனக்கு ஐந்தாவது நபர்களை எதிர்கொள்வது கூட கடினமாக இருந்தது என்று அவர் பேசியுள்ளார். அதன் பிறகு ஒரு வழியாக நான் என்னை தேற்றிக்கொண்டு அதிலிருந்து வெளியில் வந்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.