பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் அடிக்கடி தனது பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார். பின்னர் கோபம் தணிந்த பிறகு வீட்டிற்கு வந்துவிடுவார். அதேபோன்றுதான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் சண்டை போட்ட அந்த பெண் கோபித்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் தனது வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு தனியாக அமர்ந்து கொண்டிருந்தார்.
இதை சாதகமாக பயன்படுத்திய இளைஞர்கள் மூவர் அந்தப் பெண்ணிடம் வந்து லாவகமாக பேசி அவரை ஒரு பேருந்துக்குள் அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மறுநாள் அந்த பெண்ணை தனிமையான ஒரு இடத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். அந்த பெண் தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் மூன்று பேர் மீது புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் தீவிரமாக தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.