புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – ஒரு கிண்ணம்
புளி – ஒரு கொட்டை
பருப்பு – ஒரு கரண்டி
மிளகாய்வற்றல் – 4
இஞ்சி, தேங்காய் – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் புதினாவை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் எடுக்கவும். அடுத்து உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்.
பின் ஒரு கொட்டை புளி மற்றும் உப்பு சேர்த்து இரண்டையும் பருப்புடன் கலந்து அரைக்கவும். அதனுடன் வதக்கிய புதினாவையும் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்துக் பரிமாறினால் சுவையான புதினா சட்னி தயார்.