மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும், துரோகிகளை தூள் தூளாக்குவோம் என வீர சபதம் ஏற்போம். நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து நாற்பதும் நமதே, நாளையும் நமதே என சூளுரைப்போம் என்று இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதன்பின் ஜெ., நினைவிடத்தில் மவுன அஞ்சலி செலுத்தி இபிஎஸ் மனம் உறுதியுடன் இருந்தாலும், தன்னை அறியாமல் கண்கலங்கினார்.