அதிமுக 50 வது ஆண்டு பொன்விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்ட்டது. இதனையொட்டி சசிகலா எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்று அதிமுக கொடியுடன் காரில் சென்று அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்ற திமுக பொன்விழா நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். “கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போலாமா? என்ற பாடல் வரிகளைக் கூறி தற்போதைய தலைமையை சூசகமாக விமர்சித்தார். தேர்தலில் இருந்து நான் ஏன் ஒதுங்கி இருந்தேன் என்று அதிமுகவிற்கு தெரியும். என்னால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.