உக்ரைன் போரில் ரஷ்யா மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகள் கவிழ்க்கப்பட்டதாக அதிபர் ஜெலனஸ்கி கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜெலனஸ்கி உரை நிகழ்த்தியுள்ளார். உக்ரைன் போரில் ரஷ்ய படைகள் அனைத்து வகையான பீரங்கிகள், ஏவுகணை, வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும் அதிலும் குறிப்பாக பொது கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்ய படைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இது முற்றிலும் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம். உக்ரைன் மக்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதாகவும், ரஷ்யாவிற்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் உலக நாடுகள் ஈடுபடாமல் தடைகளை அதிகப்படுத்தினால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தானாக வரும் என கூறியுள்ளார்.