இன்றைய காலகட்டத்தில் பலரும் சாதி, மதம் என்ற பெயரில் அரசியல் செய்து வருகின்றனர். மேலும் மக்களிடையேயும் இந்த சாதி, மத வேற்றுமை பல்கிப் பெருகிக் கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் வளரும் குழந்தைகளிடம் கூட சாதியை விதைத்து வருகின்றனர். இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டும் விதமாக மியான்மர் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது .
அதாவது புத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து மதத் துறவிகள் இணைந்து மியான்மரில் வாழ்வாதாரத்தை இழந்த 300 குடும்பங்களுக்கு அரிசி, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளனர். மதத்தை வைத்து அரசியல் செய்யும் சிலருக்கு இந்த செயல் சவுக்கடியாக அமைந்துள்ளது. மனிதநேயமே இதில் வெற்றி பெறும் என்று இந்த செய்தியை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து இணையவாசிகள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.