Categories
பல்சுவை

மனிதனின் கனவுகள்…. எப்படி வருகிறது தெரியுமா?…. இதோ சில சுவாரஸ்ய தகவல்….!!!

மனிதனின் கனவு என்பது மனதிற்கும் மனிதனுக்கும் உள்ள பேச்சு பரிமாற்றம். நமது உடலை மறந்து நாம் உறங்கும் போது நமது மனம் எழும், தனது ஆசைகளை படக்காட்சிகள் போல கூறி புலம்பும் அல்லது மகிழும். தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான் நள்ளிரவு அதிகாலை வேளைகளில் கனவுகள் வருகின்றன. பகலில் நாம் நினைப்பவை இரவு உறக்கத்தில் வரும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் கனவுகள் வித்தியாசப்படும். பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஆண்கள் மட்டும் தான் வருவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை, ஆணும் பெண்ணும் சமம்தான்.

மேலும் பெண்களை விட ஆண்களே உணர்வுபூர்வமான கனவு காணுகிறார்கள். மேலும் 100- இல் 20 சதவீதம் பேருக்கு black and white கனவுகள் தான் வரும். 80 சதவீதம் பேர் கலர் கனவு வரும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் உறங்கும் போது அவர் கனவு காணுகிறாரா இல்லையா என்பதை நாம் எளிதில் தெரிந்துகொள்ள முடியும். அது எப்படி என்றால், தூங்கும்போது கருவிழிகள் அசைந்து கொண்டிருந்தால் அவர் கனவு காண்கிறார் என்று அர்த்தம்.

Categories

Tech |