Categories
மாநில செய்திகள்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி கூடிய விரைவில் வெற்றி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இவர் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 3 முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது முதலில் பாதுகாப்பு வசதிகளை உறுதி படித்துவிட்டு ராக்கெட்டில் சுற்றுச்சூழல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு 2 ரோபோக்களை ராக்கெட்டில் வைத்து விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த சோதனை வெற்றி அடைந்துவிட்டால் விண்வெளிக்கு மனிதன் அனுப்பப்படுவார். ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதன் அனுப்பப்படுவார்.

இந்த ராக்கெட்டில் இன்னும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட வேண்டி இருக்கிறது. இந்த சோதனைகள் அனைத்தும் இந்த வருடத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனையடுத்து குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு 2300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தற்போது 50 சதவீதம் நிலம் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் மீதமுள்ள நிலங்கள் இன்னும் 3 மாதங்களுக்குள் கிடைத்துவிடும். அதன்பிறகு ராக்கெட் அமைப்பதற்கான பல்வேறு தொழில்நுட்ப சோதனைகள் நடத்தப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்‌. மேலும் ஒரு தடவை பயன்படுத்திய ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

Categories

Tech |