Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனிதன் போன்று அரிய வகை ஆந்தை… தீயாய் பரவிய தகவல்… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

செங்கல்பட்டு அருகே மனிதனின் முகம் போன்று தோற்றமளித்த அரியவகை ஆந்தையை காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் இருக்கின்ற ஒரு ஆலமரத்தில் இருந்து திடீரென ஒரு ஆந்தை கீழே விழுந்துள்ளது. அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பை கொண்டு அரிய வகை ஆக இருந்துள்ளது. ஆனால் அதற்கு உடல்நிலை முடியாததால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்து கிடந்தது. அதனால் அந்த ஆந்தையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து மீட்டு சென்றார்கள்.

மேலும் பார்ப்பதற்கு மனிதர்களின் முகம் போன்ற அமைப்பு கொண்ட ஆந்தை கீழே விழுந்த தகவல் அப்பகுதி முழுவதிலும் பரவியதால் பொதுமக்கள் கூட்டம் ஆந்தையை பார்க்க அலைமோதியது. அந்த அரிய வகை ஆந்தைகள் பிரிட்டனில் முதல் முறையாக 1976 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

Categories

Tech |