நாசாவின் விண்கலமான ‘பெர்சிசவரன்ஸ்’ செவ்வாய் கிரக பழமையை அறிய வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ‘பேர்சிசவரன்ஸ்’ என்ற பெயர் கொண்ட விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ரோவர் மற்றும் ஹெலிகாப்டர் உடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில் பாய்ந்து இருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா பெயரிட்டு இருக்கிறது.இந்த விண்கலம் 300 மில்லியன் மைல்களைக் கடந்து செவ்வாய் கிரகத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆண்டு வரை தங்கி ஆய்வு பணியில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது பூமியைப் பொறுத்த வரையில் 687 நாட்களாகும்.
மேலும் செவ்வாய் கிரகத்தின் பழமையான தன்மை மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதேனும் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை இந்த விண்கலம் ஆராய இருக்கிறது. அதே சமயத்தில் செவ்வாய் கிரகத்திலிருந்து பாறை மற்றும் மண் ஆகியவற்றின் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் என நாசா கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இருவிண்கலன்கள் 2012 கியூரியாசிட்டி மற்றும் 2018 ஆம் இன்சைட் போன்றவை ஆய்வை நடத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தவிர மேலும் ஆறு விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றுள் மூன்று அமெரிக்காவையும், இரண்டு ஐரோப்பாவையும், ஒன்று இந்தியாவையும் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.