Categories
ஆன்மிகம்

மனிதர்களுக்கு உயிர் பிரியும் வழிகள்.. இதன் வழியாக உயிர் பிரிந்தால் அர்த்தம் என்ன..? 11 வாசல்கள் இதோ..!!

மனிதர்களின் உயிர் பிரியக்கூடிய 11 வாசல்கள் பற்றி அகத்தியர் விரிவாக கூறியுள்ளார். 

வாழ்க்கையில் எதுவுமே நிலையானது அல்ல. மனிதர்களின் உயிரும் அப்படித்தான். அவ்வாறு மனித உடலிலிருந்து உயிர் பிரிகையில், ஏதேனும் ஒரு உறுப்பின் மூலமாகவே பிரியும். அப்படி உடலிலிருந்து உயிர் பிரிவதற்காக 11 வாசல்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அகத்தியர் தன் கர்ம காண்டம் என்ற நூலில் இதுபற்றி விளக்கமாக கூறியுள்ளார்.

அதில் ஒருவர் செய்த பாவங்கள் மற்றும் புண்ணியங்களின் அடிப்படையில் தான் எதன் மூலமாக உயிர் பிரியும் என்பது தெரிய வருமாம். அதன் படி,

முதல் வாசல், பாவம் மற்றும் பழி செய்தவர்கள்: ஆசனவாய் வழியாகத்தான் உயிர் பிரியும். அவை நேரடியாக நரகத்திற்கு அழைத்துச் செல்லும். அவ்வாறு பிரியும் உயிர்கள் திரும்பி வரவே பல தினங்களாகுமாம். அப்படியே திரும்பினாலும்கூட நல்ல பிறவி கிடைக்காது.

இரண்டாம் வாசல், பாவம் மட்டுமே செய்த நபர்கள்: நீரின் மூலமாக உயிர் பிரிக்கப்பட்டு அந்த உயிர்கள் அடுத்த ஜென்மத்தில் காமியாக திரியுமாம்.

மூன்றாம் வாசல், பாவத்தை அதிகமாகவும் குறைந்த புண்ணியத்தையும் செய்தவர்கள்: நாவி மூலமாக உயிர் பிரியுமாம். அப்படி பிரியும் உயிர்கள் அடுத்த ஜென்மத்தில் நோய்வாய்ப்பட்ட வராகவும், உடலில் குறைபாடு உள்ளவர்களாகவும் இருந்து துன்பத்தை அனுபவித்து வாழ்க்கையை கழிப்பார்கள்.

நான்காம் வாசல், பாவம் மற்றும் புண்ணியம் இரண்டையுமே இணையாக செய்தவர்கள்: வாய் மூலமாக உயிர் பிரியும். இவர்கள் அடுத்த ஜென்மத்தில் உணவின் மீது அதிக பற்று கொண்டு சாப்பாட்டு ராமன் என்று பெயர் எடுப்பார்களாம்.

ஐந்து மற்றும் ஆறாம் வாசல்கள், பாவத்தை அதிகமாக செய்யாதவர்கள், இவர்களுக்கு இரண்டு நாசிகளின் மூலமாக உயிர்கள் பிரியும். அப்படி பிரியும் உயிர்கள் அடுத்த ஜென்மத்தில் நல்ல வாசனையை விரும்புவார்களாம்.

ஏழு மற்றும் எட்டாம் வாசல்கள், மிகக் குறைந்த அளவே பாவம் செய்தவர்கள்: இடது மற்றும் வலது காதுகளின் மூலமாக உயிர் பிரியுமாம். இவர்கள் அடுத்த ஜென்மத்தில் கேள்வி செல்வம் அதிகமாக பெற்று வாழ்வார்களாம்.

ஒன்பது மற்றும் பத்தாம் வாசல்கள், அதிகமான புண்ணியம் செய்த நபர்கள்: இடது மற்றும் வலது கண்களின் மூலமாக உயிர் பிரியுமாம். அப்படியான உயிர்கள் அடுத்த ஜென்மத்தில் கல்வி செல்வம் அதிகம் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள். இந்த உயிர்கள் பழி பாவத்துக்கு பயந்து வாழ்வார்களாம். கடவுள் பக்தி அதிகமுடையவர்கள்.

பதினோராம் வாசல், சிவனின் வழியில் உள்ள உயிர்கள்: தனக்கு அளிக்கப்பட்ட உடலில் பிராரப்த கர்மங்களை கழிப்பார்கள். பல நாட்களாக யோகா பயிற்சிகள் பழகி நாடி மூலமாக பிராணனை மேலெழுப்பி பிரமாந்திர வழியை திறந்து கபாலத்தின் மூலமாக ஒளிமயமாக உச்சி வாசல் ஊடாக செல்லும். இந்த உயிர்கள் மறுபடியும் பிறக்காது.

Categories

Tech |