Categories
உலக செய்திகள்

மனிதர்களுக்கு மட்டுமல்ல… நாய்களுக்கும் ஊரடங்கு அறிவித்த பிரதமர்…!!!

தென் ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாமல் நாய்களுக்கும் ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை காரணமாக பல நாடுகள் மீண்டும் முழு ஊரடங்கை தொடங்கியுள்ளன. சில நாடுகள் மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்தவகையில், தென் ஆஸ்திரேலியா அண்மையில் ஊரடங்கை அறிவித்தது. அதன் கீழ் யாருக்கும் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை, நாய் உள்ளிட்ட தங்கள் செல்லப்பிராணிகளை உடற்பயிற்சி செய்வதற்கோ அல்லது நடப்பதற்கோ கூட்டிசெல்லக் கூட அனுமதி இல்லை என்று தெரிவித்து அதிரவைத்துள்ளது.

மேலும், குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே ஒரு நாளைக்கு ஒரு முறை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார், அதுவும் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே. முகமூடி அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே அவருக்கு வீட்டை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படும். அது தவிர, அனைத்து பள்ளிகள், கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தலைநகர் அடிலெய்டில், ஒரு துப்புரவாளர் மூலம், 23 பேருக்கு கொரோனா பரவியதை அடுத்து மாநில பிரதமர் ஸ்டீவன் மார்ஷல் கடுமையான ஊரடங்கை அறிவித்துள்ளார்.

Categories

Tech |