மனிதர்களை உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான மன நோய் சிகிச்சை.
ப்ரீகேடட் அகடமி என்ற ரஷ்ய நிறுவனம் ஒன்று மனிதர்களின் பயம் மற்றும் கவலைகளை நீக்குவதற்காக அவர்களை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான செயலை “மனித நோய் சிகிச்சை முறை” என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரஷ்ய நிறுவனம் உண்மையிலேயே திகில் மற்றும் மருத்துவ சிகிச்சை இரண்டிற்கும் இடையிலான சுவரை மெல்லிய தாக்கியுள்ளது. இதற்காக அந்த நிறுவனம் சுமார் 47 லட்சம் வரை கட்டணம் வசூலித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்நிறுவனம் கூறியதாவது, ” எந்த சிகிச்சை முறையானது உங்கள் பயம் மற்றும் பதட்டத்திலிருந்து உங்களை விடுவிக்கும் என்றும் இது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளனர்.
இந்த சிகிச்சை அல்லது உங்களுடைய கவலையை கடக்க உதவுவதுடன் மட்டுமல்லாமல் சில மன திறன்களை கண்டறியவும் உதவுகிறது. மேலும் இந்த சிகிச்சை முறையானது ரஷ்ய நாட்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிங் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சிகிச்சை இரண்டு தொகுப்புகளாக வழங்கி வருகின்றது. முதல் தொகுப்பு என்னவென்றால் மேலே குறிப்பிட்டுள்ளபடி உயிரினம் முழுமையாக ஒரு மணி நேரம் மண்ணில் புதைப்பதாகும். இரண்டாவது தொகுப்புகள் என்னவென்றால் 12 லட்சத்திற்கு ஆன்லைன் இறுதி சடங்கு பதிப்பாகும்.
இதில் மெழுகுவர்த்திகள் மற்றும் இறுதி ஊர்வல பாடல்களுடன் உங்கள் இறுதி சடங்கை காணலாம். இந்த தொகுப்பு மன அழுத்தத்தை குறைக்கும் என்று நம்பப்படுகின்றது. இது மட்டுமல்லாமல் பயம் மற்றும் கவலைகளுக்கான மன அழுத்த சிகிச்சை” என்றும் அழைக்கப்படுகின்றது. மேலும் ப்ரிகேடட் அகாடமியின் உரிமையாளரான Yakaterina Preobrazhenskaya கூறியதாவது, ” இந்த சிகிச்சை முற்றிலும் பாதுகாப்பானது. உயிருடன் புதைக்கப்பட்டாலும் மனித உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. தனது வாடிக்கையாளரின் பாதுகாப்பை முதன்மையான முன்னுரிமை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.