மூதாட்டி ஒருவர் மனிதர்களை கொன்று மாமிசத்தை சிறுவர்களுக்கு உணவளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த சோபியா ஜுகோவா 81 வயதுடைய இந்த மூதாட்டி 7 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோபியா ஜுகோவா பன்றிகள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கடந்த 2005ஆம் வருடம் சிறுமி ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் சிறுமியின் தலையை மட்டும் தான் காவல்துறையினரால் மீட்க முடிந்தது. அதன்பின் 52 வயதான ஆண் காவலாளி ஒருவரையும் அவரின் நண்பரான 77 வயதுடைய நபர் ஒருவரையும் கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
இந்த 3 வழக்குகளின் தொடர்பாக விசாரணை கைதியாக சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அப்போது இவருக்கு கொரோனா ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ம் தேதி சோபியா ஜுகோவா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மரணத்திற்கு முன்பு 4 கொலை வழக்குகள் முடிவுக்கு வராமல் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் சோபியா ஜுகோவா தான் கொன்றவர்களை கோடாரியால் கொடூரமாக தாக்கியதாக காவல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் இவரால் கொலை செய்யப்பட்ட காவலாளியின் உடல் உறுப்புகளை குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாத்து வந்ததாகவும் கடந்த 2019 ஆம் வருடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இவர் தான் மனித மாமிசம் உண்ண மாட்டேன் என்று தெரிவித்துள்ளாராம். மேலும் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற காவலாளியை தான் கொன்றேன் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளியில் படிக்கும் சிறுமியை கடத்தி வந்து மூன்று வாரம் தன்னுடன் வைத்திருந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் வெட்டப்பட்ட மனித மாமிசங்களை இவர் தெருவில் திரியும் நாய்களுக்கு உணவாகியுள்ளார். இதோடு மட்டுமன்றி இந்த மனித மாமிசத்தில் இனிப்புகளை தயார் செய்து தெருவில் செல்லும் சிறுவர் சிறுமிகளுக்கு அளித்துள்ளார். மேலும் அருகில் வசிக்கும் வீடுகளுக்கும் மாமிச உணவை கொடுத்து வந்துள்ளார். அது மனித மாமிசமாக தான் இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.