Categories
மாநில செய்திகள்

மனிதர்களை கொண்டு பாதாள சாக்கடை சுத்தம் செய்வதா?… தமிழக அரசை கண்டித்த உயர்நீதிமன்றம்…!!!

தமிழகத்தில் மனிதர்களை கொண்டு பாதாள சாக்கடை சுத்தம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பாதாள சாக்கடைகளை இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் பெருமளவு ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுத்தம் செய்யும் பணிகளின்போது விஷவாயு தாக்கிய உயிரிழக்கும் தொழிலாளிகளுக்கு போதுமான இழப்பீடு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணையில் நாகரீக சமூகத்தில் மனிதர்களை பாதாள சாக்கடை சுத்தம் செய்வதை ஏற்க முடியாது என்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அடுத்த வாரம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |