Categories
உலக செய்திகள்

“மனிதாபிமானத்தின் உச்சம்” ஏழைகளுக்கு இலவச ரொட்டி தயாரித்து வழங்கும் மிஷின்….. துபாய் அரசின் அசத்தல் நடவடிக்கை….!!!!

துபாய் நாட்டில் ஒரு நிமிடத்திற்குள் இலவசமாக சூடான ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் எந்த ஒரு ஏழையும் பசியுடன் தூங்கக் கூடாது என்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி மிஷின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆணைப்படி நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்ட துவக்கமாக வெளிநாட்டு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்படுகிறது. அதன் பிறகு ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் நிறுவப்பட்ட  மெஷின்களுக்கு பொதுமக்களும் நிதி உதவி செய்யலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மற்றும் எம்எம்எஸ் மூலமாகவும், துபாய் நவ் ஆப் மூலமாகவும் நன்கொடை செலுத்தலாம். இந்நிலையில் இலவச உணவு இயந்திரத்தின் மூலம் உணவு பெற்ற ஒரு தொழிலாளி இன்றைய தினம் உணவுக்காக ஒதுக்கி வைத்திருந்த பணத்தை என்னுடைய குடும்பத்திற்கு நான் அனுப்பிவிட்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் அரசின் புதுமையான முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த இலவச ரொட்டி மிஷின் தயாரித்து வழங்கும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.

Categories

Tech |