Categories
தேசிய செய்திகள்

மனிதாபிமானத்தின் உச்சம் : “சிறுமியை காப்பாற்ற ஓடும் ரயிலுக்குள் பாய்ந்த நபர்…!!” வைரலாகும் வீடியோ…!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபார் பர்கேடி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தச்சராக வேலை பார்த்து வருபவர் முகமது மெஹபூப். இவர் கடந்த வாரம் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரயில்வே தண்டவாளம் ஒன்றைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தார். அந்த சமயத்தில் தனது பெற்றோருடன் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு சிறுமி தண்டவாளத்தில் கால் தவறி கீழே விழுந்தார். அந்த நேரம் பார்த்து சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அனைவரும் கூச்சலிடத் தொடங்கினார்.

ஆனால் முகமது தண்டவாளத்தில் குதித்து ஊர்ந்து சென்றவாறு சிறுமியை தண்டவாளங்களுக்கு நடுவில் இழுத்துப்போட்டு அவரது தலையை நன்றாக அழுத்திப் பிடித்துக் கொண்டார். இதனையடுத்து தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் இருவர் மீதும் படாமல் சென்றது. இதனால் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். இந்த காட்சிகள் அங்கிருந்த அவர்களால் செல்போன் மூலம் வீடியோவாக எடுக்கப்பட்டு இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த வீடியோவை பார்த்த பலரும் தன்னுடைய உயிரை கூட பொருட்படுத்தாமல் சிறுமியை காப்பாற்றிய முகமதுவுக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |