Categories
உலக செய்திகள்

மனிதாபிமான வழித்தடம்…. பேருந்துகள் மூலம் வெளியேறும் மக்கள்…..!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ், மரியுபோல் ஆகியவற்றில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அதிக அளவில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பீரங்கிகள் மூலம் ராட்சச குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் 700 இந்தியர்கள் சிக்கியுள்ள சுமி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சுமி நகரில் நடந்த குண்டுவீச்சில் 9 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுமியில் அமைக்கப்பட்டுள்ள மனிதாபிமான வழித்தடத்தில் பேருந்துகள் மூலமாக பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி உக்ரைனின் சுமி பகுதியில் மனிதாபிமான வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. கீவ், கார்கீவ் மற்றும் சுமி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வெளியேறுவதற்காக நேற்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

Categories

Tech |