Categories
உலக செய்திகள்

மனித உரிமைகளுக்கு தலிபான்கள் மதிப்பளிக்க வேண்டும்..! ஐரோப்பிய யூனியன் வேண்டுகோள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஐரோப்பிய யூனியன் தலிபான் பயங்கரவாதிகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் தலிபான் பயங்கரவாதிகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று ஐரோப்பிய யூனியனுக்கான வெளியுறவுக் கொள்கை தலைவர் போர்ரெல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தலிபான்களின் செயல்பாடுகளை பொறுத்து புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது அதிகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பயங்கரவாதிகளுக்கு புதிய அரசாங்கம் கண்டிப்பாக இடம் கொடுக்காது என்று கூறப்படுகிறது. அதே சமயம் சட்ட ஒழுங்கு மற்றும் சுதந்திர ஊடகங்களுக்கான அனுமதி வழங்கப்படுவதோடு மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிற அரசியல் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |