Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விருது”….!!!!!!

மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கப்படுகின்றது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா நடைபெறுகின்றது. இவ்விழாவில் தமிழகத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட 3 ஆட்சியர்கள் மற்றும் 3  சூப்பிரண்டுகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றது.

இதன்படி இந்த வருடம் விருதுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜூவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். இவ்விருதானது மனித உரிமைகளை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது உள்ளிட்டவற்றிற்காக வழங்கப்படுகின்றது.

Categories

Tech |