Categories
உலக செய்திகள் மற்றவை விளையாட்டு

மனித உரிமை மீறல் நடக்குது…. ஒலிம்பிக் போட்டி வேண்டாம்…. குடியரசு கட்சி தலைவர்கள் கோரிக்கை….!!

சீனாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க கோரி குடியரசு கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சினாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நிறுத்தக்கோரி குடியரசு கட்சி தலைவர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற மனித உரிமை அமைப்பு சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்கை நடத்தக்கூடாது என்று கூறியுள்ளது.

சீனாவில் கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அங்கு குளிர்கால ஒலிம்பிக் நடத்தக்கூடாது என அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும் என்று நிக்கி ஹாலே உள்ளிட்ட குடியரசு கட்சி முக்கிய தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஒலிம்பிக் போட்டியை வேறு இடத்தில் வைக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கேட்டு கொண்டனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவிப்பை ஜோ பைடன் வெளியிட வேண்டும் என்ற பிரசாரம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஐநா முன்னாள் தூதரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே தனது முதல் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.

அப்போது அவர் சீனா தனது மிகப்பெரிய கம்யூனிச பிரச்சார திட்டத்தின் ஒரு பகுதியான குளிர்கால விளையாட்டை பயன்படுத்திக் கொள்வதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று கூறினார். சீனா செய்யும் மனித உரிமை மீறலை மறைப்பதற்காக ஒலிம்பிக்கை ஆயுதமாக பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும் கூறினார். குடியரசு கட்சி தலைவர்களின் கோரிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் பீசாகி இந்த விஷயத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியின் பரிசீலினை படியே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |