சாலைகளில் பொதுவாக தார் சாலைகள், மணல் சாலைகள் போன்றவைகள் அமைக்கப்படும். ஆனால் மனித எலும்புக்கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ரஷ்யாவில் கடந்த 1932-ம் ஆண்டிலிருந்து 1952 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மனித எலும்புக்கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த சாலைகளை அமைப்பதற்கு சிறைக்கைதிகள் வேலையாட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வேலைக்காக கிட்டத்தட்ட 7.5 லட்சம் கைதிகள் பணியாற்றியுள்ளனர்.
அந்த இடத்தில் வெப்பநிலையானது -50° செல்சியஸ்க்கும் குறைவாக இருந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனை உறைய வைக்கக்கூடிய அளவிற்கு குளிர் நிலவும். இந்தக் கடுமையான குளிரிலும் சிறைக்கைதிகள் வேலைப் பார்த்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் உடை கிடைக்காததால் 2.5 லட்சத்துக்கும் அதிகமான கைதிகள் உயிரிழந்தனர். இந்த கைதிகளின் உடல்கள் சாலைகளுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவில் இருக்கும் அந்த சாலை THE ROAD OF BONES என அழைக்கப்படுகிறது. மேலும் அவ்வழியாக செல்பவர்கள் சாலையில் எலும்புக்கூடுகள் கிடப்பதாக கூறுகின்றனர்.