இன்றைய நவீன காலகட்டத்தில் பலவிதமான நவீன கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அதேபோல சாக்கடை களையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்வதற்கும் நவீன கருவிகள் வந்த நிலையிலும் அற்ப பணத்துக்காக மனிதர்களே அள்ளும் நிலை தற்போது நீடித்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனித கழிவுகளை அகற்றுவதற்காக மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தனர் .இதற்கு பதிலளித்த தமிழக அரசு பாதாளச் சாக்கடைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கு இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது என்று கூறியது. இதனை தொடர்ந்து கழிவுகளை அகற்ற மனிதர்கள் பயன்படுத்துவதில்லை என்று உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.