Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மனித நேயம்..! விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்….. ஹீரோ டிரைவர் உள்ளிட்டோருக்கு ‘நற்கருணை வீரன்’ விருது…. உத்தரகாண்ட் காவல்துறை அறிவிப்பு..!!

வெள்ளிக்கிழமை அதிகாலையில் விபத்திற்குப் பிறகு ரிஷப் பந்திற்கு உதவிய ஹரியானா ரோட்வேஸ் பேருந்து ஓட்டுநருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ‘நற்கருணை வீரன்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். அவரது சொகுசு கார் சாலையில் உள்ள டிவைடரின் மீது மோதி தீப்பிடித்ததில், அதிசயமாக உயிர் தப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூரில் நடந்த விபத்து நடந்துள்ளது. 25 வயதான பண்ட் தனது தாயை ஆச்சரியப்படுத்த தனது சொந்த ஊரான ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்தபோது கண் அசந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் தீ பிடிப்பதற்கு முன் காரின் ஜன்னல் கதவை உடைத்து பண்ட் வெளியேற முயன்ற போது அந்த வழியாக வந்த ஹரியானாவை சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவர்களுடன் சில பயணிகள் அவரை படுகாயங்களுடன் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவருக்கு தண்ணீர் கொடுத்து கம்பளி கொடுத்து முதலுதவியும் செய்துள்ளனர். அதன்பின் அவர் சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பின் நெற்றியில் 2 வெட்டுக்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றிலும் காயம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரிஷப்பின் நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ் டிரைவர் சுஷில் குமார் மற்றும் பரம்ஜீத் இருவரையும் மாநில அரசு கவுரவிக்கவுள்ளது. ஹரியானா ரோட்வேஸ் பானிபட் டிப்போவின் பொது மேலாளர் குல்தீப் ஜங்ரா பிடிஐக்கு தொலைபேசியில் அவர்கள் பானிபட் திரும்பியதும் எங்கள் அலுவலகத்தில் அவர்களுக்கு ஒரு பாராட்டு கடிதம் மற்றும் கேடயம் கொடுத்தோம். கார் சாலை டிவைடரில் மீது மோதியதை குமார் பார்த்தார், அதன் பிறகு அவர் தனது நடத்துனருடன் நின்று உதவிக்கு ஓடினார். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் மனித நேயத்திற்கு உதாரணமாக இருக்கிறது. பானிபட் நோக்கிச் சென்ற பேருந்து, ஹரித்வாரில் இருந்து அதிகாலை 4:25 மணிக்கு புறப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து விபத்து நடந்த இடத்தை அடைந்தது என்று கூறினார்.

ஹரியானா போக்குவரத்து அமைச்சர் மூல் சந்த் ஷர்மா கூறுகையில், குமார் மற்றும் பரம்ஜீத் இருவரும் மனிதநேயத்தின் உதாரணத்தை முன்வைத்து, பன்ட்டுக்கு உடனடி உதவி வழங்கினர் என்றார். ஹரியானா முதன்மைச் செயலாளர் (போக்குவரத்து), நவ்தீப் விர்க் அவர்களும் குமார் மற்றும் பரம்ஜீத் ஆகியோரைப் பாராட்டினர்.

இந்நிலையில் இந்த விருதை உத்தரகாண்ட் காவல்துறை ட்விட்டரில்  “சாலை விபத்துக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு உதவ முன்வந்தவர்களை கௌரவித்து ‘நற்கருணை வீரன்’ விருது வழங்கி வெகுமதி அளிப்பதாக ஸ்ரீ அசோக் குமார், ஐபிஎஸ், டிஜிபி சார் அறிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.

 

உத்தரகாண்ட் டிஜிபி கூறியதாவது, டிரைவர் சுஷில் குமார் உட்பட பண்டை காப்பாற்றியவர்களுக்கு மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘நற்கருணை வீரன்’ விருதை  வழங்கி கெளரவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, விபத்தை நேரில் பார்த்த டிரைவர் சுஷில் மான் ரிஷப் பந்திற்கு உதவினார். டிரைவர் முதலில் அவரை காரிலிருந்து வெளியேற உதவினார், பின்னர் அவரை ஒரு போர்வையில் போர்த்தி, ஆம்புலன்ஸையும் அழைத்தார். டிரைவர் மான் தவிர, சம்பவத்தின் போது உதவிய மற்ற உள்ளூர் மக்களுக்கும் வெகுமதி வழங்கப்படும். விபத்திற்குப் பிறகு முதல் மணிநேரம், அதுவே பொன்னான நேரம், பாதிக்கப்பட்டவருக்கு மிகவும் முக்கியமானது. முதல் ஒரு மணி நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இதுபோன்ற சூழ்நிலையில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க குடிமக்களை ஊக்குவிப்பதே “நற்கருணை வீரன் விருது” என்று அறிக்கை மூலமாக குறிப்பிட்டுள்ளார்.  டெல்லி-ஹரித்வார் நெடுஞ்சாலையில் பாண்டின் கார் டிவைடரில் மோதியதைக் கண்ட டிரைவர், அவருக்கு உதவ விரைந்தார்.

https://twitter.com/uttarakhandcops/status/1608839302200561666

Categories

Tech |