Categories
உலகசெய்திகள்

மனித ரோபோக்களை பயன்படுத்தும் திட்டம் வெற்றி பெறுமா…? எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு..!!!!

டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையின் ஆயிரக்கணக்கான மனித ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனமான எலான் மஸ்க் ரோபோக்கள் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்தன் விளைவாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு ரோபோக்களை விட மனிதர்களை சிறந்தவர்கள் என நான்கு வருடங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது டெஸ்க்டா கார் உற்பத்தி தொழிற்சாலையில் டெஸ்லா பார்ட்ஸ் என்ற மனித ரோபோக்களை ஆயிரக்கணக்கில் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக டெஸ்லாவில் பல்வேறு ஆலோசனை பரிந்துரை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வகை மனித ரோபோக்கள் வரும் 30ம் தேதி செயற்கை நுண்ணறிவு நாள் அன்று அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் சக்தி வாய்ந்த ரோபோக்கள் அடுத்த வருடம் முதல் உற்பத்தி பிரிவில் பயன்படுத்தப்பட இருப்பதாக மஸ்க் கூறியுள்ளார். அதேசமயம் மனித ரோபோக்களை பயன்படுத்தும் திட்டம் வெற்றி பெறுமா? என ரோபோட் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |