கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரகுடி மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான ராஜதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக ராஜதுரை சென்றுள்ளார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மனு எழுதிவிட்டு அதனை நகல் எடுப்பதற்காக நடந்து சென்ற போது திடீரென ராஜதுரை மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ராஜதுரையை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அறிந்த கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.