மாற்றுத்திறனாளி கொடுத்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள் அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமை என்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடைபெறும். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டமானது நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
நேற்று மொத்தம் 447 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கொட்டுமாரன மாறானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனுசாமி என்பவர் மூன்று சக்கர சைக்கிள் வேண்டுமென மனு கொடுத்ததையடுத்து ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பாக அவருக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் கொடுக்கப்பட்டது. சைக்கிளை ஆட்சியர் சாந்தி வழங்கினார்.