அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளன இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான
விருப்ப மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி வரை நடைபெற இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருப்ப மனு அளிப்பதற்காக வந்த அதிமுக பிரமுகர் ஓமபொடி பிரசாத்தை தொண்டர்கள் அனுமதிக்காமல் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
சரியாக விதிகளை பின்பற்றாததால் ஓமப்பொடி பிரசாத்துக்கு விருப்ப மனு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடைசி நாளான இன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் மனு வருகிற 5ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.