தமிழகத்தில் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அதனால் மக்கள் அனைவரும் பயன் பெறுகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதை வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர 10% இடத்தை பொழுதுபோக்கு பகுதிக்காக ஒதுக்க வேண்டும்.
ஒரு சதவீத பொது பயன்பாடு, 0.5 சதவீதம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வழங்க வேண்டும். மாநகராட்சியில், சாலைகள், மழைநீர் கால்வாய்கள் மற்றும் ஒப்புதல் உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனால் தமிழக மக்கள் அனைவரும் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.