Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவிக்கு கள்ளக்காதலர்கள் அனுப்பிய ஆபாச வீடியோ!!…. கணவனுக்கு நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஈச்சூர் கிராமத்தில் பரணிதரன் என்பவர்  வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அருள், முருகன்,  மன்னன் ஆகியோருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 3 பேரும் ஜெயலட்சுமியின் செல்போனிற்கு  ஆபாச வீடியோகளை  அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரணிதரன் 3 பேரையும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன்,அருள், மன்னன் ஆகியோர் தனது நபர்களுடன் பரணிதரன் வீட்டிற்கு வந்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பரணிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர்  6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |