Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மனைவிக்கு சீட் கிடைக்காததால் அதிர்ச்சி” கணவன் எடுத்த விபரீத முடிவு…. கடலூரில் பரபரப்பு…!!

மனைவிக்கு சீட் கிடைக்காததால் கணவன் தற்கொலை முற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி பகுதியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் மேயர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் தி.மு.க வை சேர்ந்த 2 பெண் கவுன்சிலர்கள் போட்டியிட்டனர். ஆனால் கட்சி நிர்வாகம் தி.மு.க கவுன்சிலர் சுந்தரியை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது. இருப்பினும் சுந்தரிக்கு எதிராக கீதா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் கீதாவின் கணவர் தனது மனைவிக்கு சீட் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அதனால்  கீதாவின் கணவர் குணசேகரன் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அதிகாரப்பூரவ மேயராக தி.மு.க வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரின் ஆதரவாளர்கள் அரசு மருத்துவமனைக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |